Posts

சீனிப்பூ சிவப்பு நிறத்தில் ஒற்றைப் பூ குளிர் பச்சை நிற இலைகளில் ஒரு அழகிய செடி காலநிலை மாற்றம் கடந்து கொஞ்சம் காலத்தினை அனுபவிக்க சென்றவேளை குளிர் பிரதேசத்தில் கொள்வனவு செய்தது.. வெட்டியெறிந்தாலும் வேர் விட்டு எழுந்து விடும் சீனிப்பூவை பிடுங்கி விட்டு வித விதமாய் பசைளையிட்டு சாடியிலே அதை நட்டி காலை மாலை நீரூற்றி கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கிறேன் என் அன்றாட வேளையில் அதுக்கெனவே நேரமொதுக்கினேன் நாலைந்து நாற்களிலே பூத்திருந்த ஒற்றைப் பூவோ கருகி தலை சாய குளிர் பச்சை இலையெல்லாம் மஞ்சள் காமாலை பிடித்து விட பிடுங்கி எறிந்த சீனிப் பூவோ அங்கும் வேர் பிடித்து வண்ண வண்ண பூக்களுடன் என்னைப் பார்த்து புன்னகைக்கிறது... 2019/04/19 புத்தளக்கவி நிஸ்னி

ஐம்பது ஆண்டுகளின் பின்

ஐம்பது ஆண்டுகளின் பின்..... ஐம்பது ஆண்டுகளின் பின் குடும்பம் சகிதம் ஒரு குட்டி சுற்றுலா கிழக்கிலங்கை நோக்கி சுற்றிப்போக வந்த நேரம் அரும்பியது ஓர் ஆசை நான் சிறகடித்த இளமைக்காலம் இன்பதுன்பம் நட்பு காதல் தந்த பசுமைக்காலத்தை அந்த பல்கலைக்கழகத்தை பார்த்து வர ஆசை வந்து சேர்ந்தோம் வளவுக்குள் நினைவு சென்றது பின்னுக்கு பேரப்பிள்ளையின் விரல் பற்றி மெல்ல மெல்ல நடந்து செல்கிறேன் காலச்சக்கரம் பூமியையும் கொறித்துக் கொள்கிறதோ.. தோற்றம் முற்றிலும் மாறிய இலங்கைக்கு எடுத்துக்காட்டு இதோ இந்த பல்கலை தானோ நாம் படிக்கையில் தொடங்கிய தொழிநுட்ப பீடத்தை கடல் விழுங்கிக் கொண்டதோ.. அதோ அங்கு தானே அடிக்கடி சீக்கு வர ஆட்டோவில் போயிறங்கும் ஆரோக்கிய நிலையமிருந்தது ஆஹ் அங்கே இருந்த ஆண்கள் விடுதி எங்கே அய்யோ இங்கு தானே நாம் அடிக்கடி காலம் கழித்த எனக்கு மிகவும் பிடித்த ஆடல் பாடல் கராத்தே என களைகட்டும் பயிற்சி பட்டறை இருந்தது.. எங்கே அவை  நீர் மயமான வெறுமையே எங்கும் ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வந்த கடலலைகள் கலை பீடத்தின் எச்சங்களில் முட்டி மோதிச் செல்கிறது.. முட்டி நின்ற கண

நவீன நாட்டாமைகள் நாம்

Image
நவீன நாட்டாமைகள் கடைவீதிகளில் கண்டிருப்பீர் மூட்டை தூக்கும் நாட்டாமைகளை பள்ளி வீதியில் கண்டதுண்டா புத்தக மூட்டை சுமக்கும் பள்ளியாமைகளை நேர சூசி பார்த்து நேர்ந்து அடிக்கினாலும் மிஞ்சப்போவதும் ஒண்டுமில்லை மூட்டை தூக்கி முதுகில் வைத்ததும் குனிந்த முதுகோ நிமிர முடிவதில்லை கட்டு கட்டாய் நோட்டு இருக்கும் ஐந்து நாளும் ஒன்பது பாடமிருக்கும் கூடவே குறிப்பு கொப்பி இருக்கும் போதாக்குறைக்கு சோத்து மூட்டையிருக்கும் வீடு வந்து சேர்ந்த பின்னும் முதுகு வலியோ போகாமலிருக்கும் சுமை சுமக்கும் வண்டில் மாடு போல உருவில் சின்ன மாற்ற முண்டு அசை போடத்தான் ஒன்றுமில்லை வருங்கால தலைவரெல்லாம் நல்ல பணிவாய் குனிந்து நடப்பர் காலாப் போக்கில் நம்மவர்களை குனிந்து கூரிய பார்வையால் தேடிப்பிடிப்பீர் படிக்க ஆசையில் பள்ளி போனால் பளு தூக்கச்சொல்லும் கொடுமையென்ன அழகான பையில் அட்டையிட்ட புத்தகங்கள் நாகரீக நாட்டாமைகள் நாமானதென்ன ஆசிரியரே அன்புப்பெற்றோரே அரசாங்கமே அகில மாந்தரே நவீன உலகில் வழி நிறைய உண்டு நம் இடுப்பு வலி போக்க அதையறிந்து கண்டு நம் கை விலங்கை கழட்டி காற்
புத்தளத்துப் புத்திரரே களப்புக்குள் குடியிருப்போம் களைகளை கருவறுப்போம் கட்சிபேதம் கழற்றியெறிந்து தாயவளை சூழ்ந்து காப்போம் கண்ட கண்ட இடங்களிலே கழிந்த கழிவு மீதமெல்லாம் அள்ளி கொண்டு கொட்டிவிட அவளென்ன குப்பை தொட்டியா புத்தளத்து புத்திரரே உப்பு சோற்றிலிட்டு மட்டுமல்ல மூச்சிக் காற்றுடனும் அள்ளித்தின்றவர் நாம் அடிகொடுத்து விரட்டிடுவோம் நம் பலம் யாதென காட்டிடுவோம் புத்தளத்துப் புத்திரரே புறப்பட்டு வாரீரே நம் வருங்கால சந்ததியும் நற்காற்றை சுவாசிக்க வழி செய்து போவீரோ.. 2018/09/29 புத்தளக்கவி     நிஸ்னி
Image
மருவிய மா ரெக லே... பல நூற்றாண்டு முன்பின் பாத்திமா கதையிது கால கால்களின் இடுக்கில் மெதுமெதுவாய் மிதிபட்டு புதைந்து புதிதாய் "மரக்கலே" எனும் மரக்கலமாக முளைவிட்ட கதையிது கடல் கடந்து வளம் சுரண்ட வந்த போர்த்துக்கேயரின் பசித்த வாளுக்கு இரண்டாம் இராஜசிங்கனை இரையாக்கி இலங்கையை அடைந்து அள்ளிச்சுருட்ட வெறியோடு மன்னனை வெட்டிவீச துரத்த ஊவாவில் ஒரு ஊரில் முக்காடிட்ட பாத்திமாவின் மனை வளவில் வளர்ந்த பலாவின் பொந்தில் பதுங்கிக் கொண்டான் வேட்டைக்காய் வந்த போர்த்துக்கேய வீரர்கள் அகோரமாய் அதட்டியும் அம்மணி வாயோ அவனிருந்த இடம் பகரவில்லை எரிச்சலுற்ற வெறி நாய்கள் கண்டதுண்டமாய் வெட்டி சாய்த்து சென்றன இரத்த வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்த மூதாட்டியை பொந்திலிருந்து வெளிவந்த அம்மன்னன் அள்ளியெடுத்து அவள் இரத்தம் தொட்டு பார்த்து நன்றியோடு சொன்ன வார்த்தை மா ரெக லே...... (என்னைக் காத்த இரத்தம்) அவள் உயிருக்கு உயிலாய் தந்த ஊர் பங்கர கமன.. ஆனால் இன்றோ மரக்கலத்தில் வந்தால் மரக்கலேயாவாம் மறைந்த வரலாரோடு காற்றில் கரைந்துவிட்டது பாத்திமாவின் தியாக

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

உனக்காகவே உயிர்        வாழ்கிறேன் வெட்டிவிட்ட நகம் போல வீசிவிட்டு போன பின்பும் கொட்டிவிட்ட தேள் போல கோபங்காட்டி சென்ற பின்பும் வைத்த அன்பு போகவில்லை நீ வைத பின்பும் மாறவில்லை சிறகடித்துக் கொண்டேயிருக்கும் சிகரம் தொடாத கடற்பறவை போல படபடத்துக் கொண்டேயிருக்கும் என் இதயவோசை எட்டவில்லை உன் காதில் நெஞ்சினிலே சாய்ந்து நெற்றிமுடி நீவி ஒற்றை முத்தம் தந்து உன்னில் ஒன்றிவிட ஏங்கும் என்னை ஊடல் செய்தால் தாங்கிக்கொள்வேன் ஊடறுத்து செல்லும் வெள்ளத்திலே நீ வேகமாக ஓடும் ஓடமானால் என்ன ஆவேன் என் அரக்கனே என் அன்பனே தள்ளிச்சென்று கிள்ளிவிட்டு அழுகையையும் ரசிக்கிறாய் துளிர்த்த கண்ணீர் துடைத்தும் கொஞ்சம் நடிக்கிறாய் யார் நீ நீ யாராக இருந்தாலும் உனக்காகவே உயிர் வாழ்கிறேன்   புத்தளக்கவி        நிஸ்னி

அவளதிகாரம்

Image
அவளதிகாரம் ஆறேழு பெண்கள் நாலைந்து ஆண்கள் வட்டமிட்டு அமர்ந்தபடி திட்டமிட்டு கொள்கின்றனர் விட்டு விட்டு   துடிக்கும் இதயம் எட்டி வெளியே குதிப்பதாய் ஏதோ ஓரிரு வார்த்தைக்காய் ஏக்கத்தோடு காத்திருக்கிறாள் அவள் குசு குசுக்கள் முடிந்தபின் கரகரத்த தொண்டையை செருமிய படிய சொல்கிறார் சேதி என்னவென சென்றபின் சொல்லியனுப்புகிறோம் எதிர்பார்த்த பதில் தான் அவள் ஏமாற்றங்கள் புதிதுமல்ல அவளுக்கு குட்டை கொழுப்பு கொஞ்சம் கருப்பு நிராகரித்தல்களின் குவியல் இவை நிராசைகளை மட்டும் விதைத்த எதிர்பாரத்த ஏமாற்றங்கள்   இத்தோடு அவளுக்கு   பழகிப்போன புண்கள் காட்சியறை பொம்மையாய் வந்தவர் கண்களுக்கு விருந்தளித்து நிற்கிறாள் இந்த சந்தையிலாவது விலை போக மாட்டேனா கன்றிப்போன மனதுடன் கலைக்கிறாள் கோலத்தை நாளை வருபவனுக்காய் மறுபடியும் புதிதாக நாளை கோலமிட தன்னை... 2018/06/23 புத்தளக்கவி நிஸ்னி இ.தென்கிழக்கு பல்கலைக்கழகம்