Posts

Showing posts from July, 2018

அவளதிகாரம்

Image
அவளதிகாரம் ஆறேழு பெண்கள் நாலைந்து ஆண்கள் வட்டமிட்டு அமர்ந்தபடி திட்டமிட்டு கொள்கின்றனர் விட்டு விட்டு   துடிக்கும் இதயம் எட்டி வெளியே குதிப்பதாய் ஏதோ ஓரிரு வார்த்தைக்காய் ஏக்கத்தோடு காத்திருக்கிறாள் அவள் குசு குசுக்கள் முடிந்தபின் கரகரத்த தொண்டையை செருமிய படிய சொல்கிறார் சேதி என்னவென சென்றபின் சொல்லியனுப்புகிறோம் எதிர்பார்த்த பதில் தான் அவள் ஏமாற்றங்கள் புதிதுமல்ல அவளுக்கு குட்டை கொழுப்பு கொஞ்சம் கருப்பு நிராகரித்தல்களின் குவியல் இவை நிராசைகளை மட்டும் விதைத்த எதிர்பாரத்த ஏமாற்றங்கள்   இத்தோடு அவளுக்கு   பழகிப்போன புண்கள் காட்சியறை பொம்மையாய் வந்தவர் கண்களுக்கு விருந்தளித்து நிற்கிறாள் இந்த சந்தையிலாவது விலை போக மாட்டேனா கன்றிப்போன மனதுடன் கலைக்கிறாள் கோலத்தை நாளை வருபவனுக்காய் மறுபடியும் புதிதாக நாளை கோலமிட தன்னை... 2018/06/23 புத்தளக்கவி நிஸ்னி இ.தென்கிழக்கு பல்கலைக்கழகம்

வீழ்வேனென்று நினைத்தாயோ

Image
வீழ்வேனென்று நினைத்தாயோ எத்திசையும் எம்மனமே எவ்விசையும் எம்மினமே கண்ணசையும் வேளையிலும் கச்சிதமாய் பண் சமைப்போம் எழுச்சிமிகு வேளையிலும் எழுத்துக்களால் போர் தொடுப்போம் நற்றமிழாய் நாமிருப்போம் வேந்தனவன் வேலெனவே தீமைக்காய் தீட்டிடுவோம் பசுங்கொடியே பவள மல்லியே என்றும் கொஞ்சம் கொஞ்சிடுவோம் மிஞ்சுவோரின் மார்பினிலே மின்னும் வாளாய் பாய்ந்திடுவோம் வேங்கைகள் இனமடா வேறு கதை வேண்டாமடா வேட்டையாடும் களை நமக்கு வேளா வேளை பழக்கமடா பாவப்பட்ட பாரினிலே பார்க்கும் கண்கள் பார்வையிலே கோணல் கொஞ்சம் அதிகமே கோடி கொண்ட கைகள் இங்கே கேட்ட வரம் கொள்ளுமே இருந்தும் என்ன மானிடா எழுந்து வா நீ அதிர்ந்திட கிண்டு நிலத்தை விளைந்திட அள்ளிக் கொடுக்க துணிந்திடு ஆங்கிலங்கள் ஆளவரும் அடிகள் கொடுத்தே துரத்திடு பல அதிகாரங்கள் கூட வரும் அப்போதும் நீ எதிர்த்திடு திமிரில் விறைத்த நெஞ்சுடன் அனல் பறக்கும் விழிகளுடன் அகங்காரத்துடனே வினா தொடுத்திடு வீழ்வேனென்று நினைத்தாயோ..