அவளதிகாரம்
- Get link
- X
- Other Apps
அவளதிகாரம்
ஆறேழு பெண்கள்
நாலைந்து ஆண்கள்
வட்டமிட்டு அமர்ந்தபடி
திட்டமிட்டு கொள்கின்றனர்
நாலைந்து ஆண்கள்
வட்டமிட்டு அமர்ந்தபடி
திட்டமிட்டு கொள்கின்றனர்
விட்டு விட்டு
துடிக்கும் இதயம்
எட்டி வெளியே குதிப்பதாய்
ஏதோ ஓரிரு வார்த்தைக்காய்
ஏக்கத்தோடு காத்திருக்கிறாள்
அவள்
துடிக்கும் இதயம்
எட்டி வெளியே குதிப்பதாய்
ஏதோ ஓரிரு வார்த்தைக்காய்
ஏக்கத்தோடு காத்திருக்கிறாள்
அவள்
குசு குசுக்கள் முடிந்தபின்
கரகரத்த தொண்டையை
செருமிய படிய சொல்கிறார்
சேதி என்னவென
சென்றபின் சொல்லியனுப்புகிறோம்
கரகரத்த தொண்டையை
செருமிய படிய சொல்கிறார்
சேதி என்னவென
சென்றபின் சொல்லியனுப்புகிறோம்
எதிர்பார்த்த பதில் தான் அவள்
ஏமாற்றங்கள் புதிதுமல்ல அவளுக்கு
குட்டை கொழுப்பு கொஞ்சம் கருப்பு
நிராகரித்தல்களின் குவியல் இவை
ஏமாற்றங்கள் புதிதுமல்ல அவளுக்கு
குட்டை கொழுப்பு கொஞ்சம் கருப்பு
நிராகரித்தல்களின் குவியல் இவை
நிராசைகளை மட்டும் விதைத்த
எதிர்பாரத்த ஏமாற்றங்கள்
இத்தோடு அவளுக்கு
பழகிப்போன புண்கள்
எதிர்பாரத்த ஏமாற்றங்கள்
இத்தோடு அவளுக்கு
பழகிப்போன புண்கள்
காட்சியறை பொம்மையாய்
வந்தவர் கண்களுக்கு
விருந்தளித்து நிற்கிறாள்
இந்த சந்தையிலாவது
விலை போக மாட்டேனா
வந்தவர் கண்களுக்கு
விருந்தளித்து நிற்கிறாள்
இந்த சந்தையிலாவது
விலை போக மாட்டேனா
கன்றிப்போன மனதுடன்
கலைக்கிறாள் கோலத்தை
நாளை வருபவனுக்காய்
மறுபடியும் புதிதாக நாளை
கோலமிட தன்னை...
கலைக்கிறாள் கோலத்தை
நாளை வருபவனுக்காய்
மறுபடியும் புதிதாக நாளை
கோலமிட தன்னை...
2018/06/23
புத்தளக்கவி நிஸ்னி
இ.தென்கிழக்கு பல்கலைக்கழகம்
புத்தளக்கவி நிஸ்னி
இ.தென்கிழக்கு பல்கலைக்கழகம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment