புத்தளத்துப் புத்திரரே

களப்புக்குள் குடியிருப்போம்
களைகளை கருவறுப்போம்
கட்சிபேதம் கழற்றியெறிந்து
தாயவளை சூழ்ந்து காப்போம்

கண்ட கண்ட இடங்களிலே
கழிந்த கழிவு மீதமெல்லாம்
அள்ளி கொண்டு கொட்டிவிட
அவளென்ன குப்பை தொட்டியா

புத்தளத்து புத்திரரே
உப்பு சோற்றிலிட்டு மட்டுமல்ல
மூச்சிக் காற்றுடனும்
அள்ளித்தின்றவர் நாம்
அடிகொடுத்து விரட்டிடுவோம்
நம் பலம் யாதென காட்டிடுவோம்

புத்தளத்துப் புத்திரரே
புறப்பட்டு வாரீரே
நம் வருங்கால சந்ததியும்
நற்காற்றை சுவாசிக்க
வழி செய்து போவீரோ..

2018/09/29
புத்தளக்கவி
    நிஸ்னி

Comments

Popular posts from this blog

நவீன நாட்டாமைகள் நாம்

அவளதிகாரம்