நவீன நாட்டாமைகள் நாம்

நவீன நாட்டாமைகள்

கடைவீதிகளில் கண்டிருப்பீர்
மூட்டை தூக்கும்
நாட்டாமைகளை
பள்ளி வீதியில்
கண்டதுண்டா
புத்தக மூட்டை சுமக்கும்
பள்ளியாமைகளை

நேர சூசி பார்த்து
நேர்ந்து அடிக்கினாலும்
மிஞ்சப்போவதும்
ஒண்டுமில்லை
மூட்டை தூக்கி
முதுகில் வைத்ததும்
குனிந்த முதுகோ
நிமிர முடிவதில்லை

கட்டு கட்டாய் நோட்டு
இருக்கும்
ஐந்து நாளும் ஒன்பது
பாடமிருக்கும்
கூடவே குறிப்பு கொப்பி இருக்கும்
போதாக்குறைக்கு சோத்து மூட்டையிருக்கும்
வீடு வந்து சேர்ந்த
பின்னும்
முதுகு வலியோ போகாமலிருக்கும்

சுமை சுமக்கும்
வண்டில் மாடு போல
உருவில் சின்ன மாற்ற முண்டு
அசை போடத்தான் ஒன்றுமில்லை

வருங்கால தலைவரெல்லாம்
நல்ல பணிவாய் குனிந்து
நடப்பர்

காலாப் போக்கில்
நம்மவர்களை
குனிந்து கூரிய பார்வையால்
தேடிப்பிடிப்பீர்

படிக்க ஆசையில்
பள்ளி போனால்
பளு தூக்கச்சொல்லும்
கொடுமையென்ன

அழகான பையில்
அட்டையிட்ட புத்தகங்கள்
நாகரீக நாட்டாமைகள்
நாமானதென்ன

ஆசிரியரே அன்புப்பெற்றோரே
அரசாங்கமே
அகில மாந்தரே
நவீன உலகில் வழி
நிறைய உண்டு
நம் இடுப்பு வலி போக்க

அதையறிந்து கண்டு
நம் கை விலங்கை
கழட்டி
காற்றில் பறந்து விளையாட
வழிசெய்யுங்கள்

2018/10/02
புத்தளக்கவி
   நிஸ்னி

Comments

Popular posts from this blog

வீழ்வேனென்று நினைத்தாயோ

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்