புத்தளத்துப் புத்திரரே களப்புக்குள் குடியிருப்போம் களைகளை கருவறுப்போம் கட்சிபேதம் கழற்றியெறிந்து தாயவளை சூழ்ந்து காப்போம் கண்ட கண்ட இடங்களிலே கழிந்த கழிவு மீதமெல்லாம் அள்ளி கொண்டு கொட்டிவிட அவளென்ன குப்பை தொட்டியா புத்தளத்து புத்திரரே உப்பு சோற்றிலிட்டு மட்டுமல்ல மூச்சிக் காற்றுடனும் அள்ளித்தின்றவர் நாம் அடிகொடுத்து விரட்டிடுவோம் நம் பலம் யாதென காட்டிடுவோம் புத்தளத்துப் புத்திரரே புறப்பட்டு வாரீரே நம் வருங்கால சந்ததியும் நற்காற்றை சுவாசிக்க வழி செய்து போவீரோ.. 2018/09/29 புத்தளக்கவி நிஸ்னி
Posts
Showing posts from September, 2018
- Get link
- X
- Other Apps

மருவிய மா ரெக லே... பல நூற்றாண்டு முன்பின் பாத்திமா கதையிது கால கால்களின் இடுக்கில் மெதுமெதுவாய் மிதிபட்டு புதைந்து புதிதாய் "மரக்கலே" எனும் மரக்கலமாக முளைவிட்ட கதையிது கடல் கடந்து வளம் சுரண்ட வந்த போர்த்துக்கேயரின் பசித்த வாளுக்கு இரண்டாம் இராஜசிங்கனை இரையாக்கி இலங்கையை அடைந்து அள்ளிச்சுருட்ட வெறியோடு மன்னனை வெட்டிவீச துரத்த ஊவாவில் ஒரு ஊரில் முக்காடிட்ட பாத்திமாவின் மனை வளவில் வளர்ந்த பலாவின் பொந்தில் பதுங்கிக் கொண்டான் வேட்டைக்காய் வந்த போர்த்துக்கேய வீரர்கள் அகோரமாய் அதட்டியும் அம்மணி வாயோ அவனிருந்த இடம் பகரவில்லை எரிச்சலுற்ற வெறி நாய்கள் கண்டதுண்டமாய் வெட்டி சாய்த்து சென்றன இரத்த வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்த மூதாட்டியை பொந்திலிருந்து வெளிவந்த அம்மன்னன் அள்ளியெடுத்து அவள் இரத்தம் தொட்டு பார்த்து நன்றியோடு சொன்ன வார்த்தை மா ரெக லே...... (என்னைக் காத்த இரத்தம்) அவள் உயிருக்கு உயிலாய் தந்த ஊர் பங்கர கமன.. ஆனால் இன்றோ மரக்கலத்தில் வந்தால் மரக்கலேயாவாம் மறைந்த வரலாரோடு காற்றில் கரைந்துவிட்டது பாத்திமாவின் தியாக...
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
- Get link
- X
- Other Apps
உனக்காகவே உயிர் வாழ்கிறேன் வெட்டிவிட்ட நகம் போல வீசிவிட்டு போன பின்பும் கொட்டிவிட்ட தேள் போல கோபங்காட்டி சென்ற பின்பும் வைத்த அன்பு போகவில்லை நீ வைத பின்பும் மாறவில்லை சிறகடித்துக் கொண்டேயிருக்கும் சிகரம் தொடாத கடற்பறவை போல படபடத்துக் கொண்டேயிருக்கும் என் இதயவோசை எட்டவில்லை உன் காதில் நெஞ்சினிலே சாய்ந்து நெற்றிமுடி நீவி ஒற்றை முத்தம் தந்து உன்னில் ஒன்றிவிட ஏங்கும் என்னை ஊடல் செய்தால் தாங்கிக்கொள்வேன் ஊடறுத்து செல்லும் வெள்ளத்திலே நீ வேகமாக ஓடும் ஓடமானால் என்ன ஆவேன் என் அரக்கனே என் அன்பனே தள்ளிச்சென்று கிள்ளிவிட்டு அழுகையையும் ரசிக்கிறாய் துளிர்த்த கண்ணீர் துடைத்தும் கொஞ்சம் நடிக்கிறாய் யார் நீ நீ யாராக இருந்தாலும் உனக்காகவே உயிர் வாழ்கிறேன் புத்தளக்கவி நிஸ்னி