அவளதிகாரம்

அவளதிகாரம் ஆறேழு பெண்கள் நாலைந்து ஆண்கள் வட்டமிட்டு அமர்ந்தபடி திட்டமிட்டு கொள்கின்றனர் விட்டு விட்டு துடிக்கும் இதயம் எட்டி வெளியே குதிப்பதாய் ஏதோ ஓரிரு வார்த்தைக்காய் ஏக்கத்தோடு காத்திருக்கிறாள் அவள் குசு குசுக்கள் முடிந்தபின் கரகரத்த தொண்டையை செருமிய படிய சொல்கிறார் சேதி என்னவென சென்றபின் சொல்லியனுப்புகிறோம் எதிர்பார்த்த பதில் தான் அவள் ஏமாற்றங்கள் புதிதுமல்ல அவளுக்கு குட்டை கொழுப்பு கொஞ்சம் கருப்பு நிராகரித்தல்களின் குவியல் இவை நிராசைகளை மட்டும் விதைத்த எதிர்பாரத்த ஏமாற்றங்கள் இத்தோடு அவளுக்கு பழகிப்போன புண்கள் காட்சியறை பொம்மையாய் வந்தவர் கண்களுக்கு விருந்தளித்து நிற்கிறாள் இந்த சந்தையிலாவது விலை போக மாட்டேனா கன்றிப்போன மனதுடன் கலைக்கிறாள் கோலத்தை நாளை வருபவனுக்காய் மறுபடியும் புதிதாக நாளை கோலமிட தன்னை... 2018/06/23 புத்தளக்கவி நிஸ்னி இ.தென்கிழக்கு பல்கலைக்கழகம்