சீனிப்பூ

சிவப்பு நிறத்தில்
ஒற்றைப் பூ
குளிர் பச்சை நிற
இலைகளில்
ஒரு அழகிய செடி

காலநிலை மாற்றம் கடந்து
கொஞ்சம் காலத்தினை
அனுபவிக்க சென்றவேளை
குளிர் பிரதேசத்தில்
கொள்வனவு செய்தது..

வெட்டியெறிந்தாலும்
வேர் விட்டு எழுந்து விடும்
சீனிப்பூவை பிடுங்கி விட்டு
வித விதமாய் பசைளையிட்டு
சாடியிலே அதை நட்டி
காலை மாலை நீரூற்றி
கண்ணும் கருத்துமாய்
பாதுகாக்கிறேன்
என் அன்றாட வேளையில்
அதுக்கெனவே நேரமொதுக்கினேன்

நாலைந்து நாற்களிலே
பூத்திருந்த ஒற்றைப் பூவோ
கருகி தலை சாய
குளிர் பச்சை இலையெல்லாம்
மஞ்சள் காமாலை பிடித்து விட

பிடுங்கி எறிந்த சீனிப் பூவோ
அங்கும் வேர் பிடித்து
வண்ண வண்ண பூக்களுடன்
என்னைப் பார்த்து புன்னகைக்கிறது...

2019/04/19
புத்தளக்கவி
நிஸ்னி


Comments

Popular posts from this blog

நவீன நாட்டாமைகள் நாம்

அவளதிகாரம்

ஐம்பது ஆண்டுகளின் பின்