வீழ்வேனென்று நினைத்தாயோ
வீழ்வேனென்று நினைத்தாயோ
எத்திசையும்
எம்மனமே
எவ்விசையும்
எம்மினமே
கண்ணசையும்
வேளையிலும்
கச்சிதமாய்
பண் சமைப்போம்
எழுச்சிமிகு
வேளையிலும்
எழுத்துக்களால்
போர் தொடுப்போம்
நற்றமிழாய்
நாமிருப்போம்
வேந்தனவன்
வேலெனவே
தீமைக்காய்
தீட்டிடுவோம்
பசுங்கொடியே
பவள மல்லியே
என்றும்
கொஞ்சம்
கொஞ்சிடுவோம்
மிஞ்சுவோரின்
மார்பினிலே
மின்னும் வாளாய்
பாய்ந்திடுவோம்
வேங்கைகள்
இனமடா
வேறு கதை
வேண்டாமடா
வேட்டையாடும்
களை நமக்கு
வேளா வேளை
பழக்கமடா
பாவப்பட்ட
பாரினிலே
பார்க்கும்
கண்கள்
பார்வையிலே
கோணல்
கொஞ்சம்
அதிகமே
கோடி கொண்ட
கைகள்
இங்கே
கேட்ட வரம்
கொள்ளுமே
இருந்தும் என்ன
மானிடா
எழுந்து வா நீ
அதிர்ந்திட
கிண்டு நிலத்தை
விளைந்திட
அள்ளிக் கொடுக்க
துணிந்திடு
ஆங்கிலங்கள்
ஆளவரும்
அடிகள் கொடுத்தே
துரத்திடு
பல அதிகாரங்கள்
கூட வரும்
அப்போதும் நீ
எதிர்த்திடு
திமிரில்
விறைத்த நெஞ்சுடன்
அனல் பறக்கும்
விழிகளுடன்
அகங்காரத்துடனே
வினா
தொடுத்திடு
வீழ்வேனென்று
நினைத்தாயோ..
2018/06/02
புத்தளக்கவி
நிஸ்னி
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
Comments
Post a Comment